397
2020 ஆசிய கி;ண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் அண்மையில்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. தற்போது 50 ஓவர் கிரிக்கெட் தொடர் 20 ஓவராக மாறியுள்ளது. இந்த தொடர் 2020ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிக்கு முன் நடைபெறவுள்ள நிலையில் அதனை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love