Home இலங்கை அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்

by admin
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும்  சைவமாநாடும் 15.12.2018 சனிக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் வண்ணை நாவலர் மகாவித்தியாலய மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் நல்லை ஆதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை தலைவர் கலாநிதி சுகந்தினி சிறிமுரளிதரனும், சிறப்பு விருந்தினர்களாக சிவஸ்ரீ து.கு.ஜெதீஸ்வரக்குருக்கள் , சிவஸ்ரீ மு.பாஸ்கரக்குருக்கள் (ரவி) , கலாநிதி விக்கினேஸ்வரி பவநேசன் கௌரவ விருந்தினர்களாக ச.விநாயகமூர்த்தி (கரவெட்டி),  ச.தட்சணாமூர்த்தி (மீசாலை) , திருமதி புனிதவதியார் சிவக்கொழுந்து (வவுனியா) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
வரவேற்புரையினை சைவப்புலவர் சா.பொன்னுத்துரையும், ஆசியுரையினை சிவஸ்ரீ து.ஜெகதீஸ்வரக்குருக்களும், அருளுரையினை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளும், சிறப்புரையினை செந்தமிழ்ச்செல்வர் ச.விநாயகமூர்த்தி  ஆகியோர் ஆற்றவுள்ளார்கள்.
கௌரவிப்பு நிகழ்வு அகில இலங்கை சைவப்புலவர் சங்க பொருளாளர் ச.முகுந்தன் நெறிப்படுத்தலில்  நடைபெறவுள்ளது. கௌரவ பட்டங்களில் சைவாகமபூஷணம் பட்டத்தினை சிவஸ்ரீ து.கு.ஜெகதீஸ்வரக்குருக்களும்  , சிவஸ்ரீ மு.பாஸ்கரக்குருக்களும் , சைவப்புரவலர் பட்டத்தினை யாழ்ப்பாணம் சிவகணேசன் ரெக்ரைல்ஸ் உரிமையாளர் கனகசபை அருள்நேசனும்,  பௌராணிகர் கௌரவத்தினை பௌராணிகர்கள் ச.விநாயகமூர்த்தி  , ச.தட்சணாமூர்த்தியும் , மூத்த சைவப்புலவர் கௌரவத்தினை சைவப்புலவர் திருமதி புனிதவதியார் சிவக்கொழுந்தும்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த முதுகலைமாணி பட்டம் பெற்ற சைவப்புலவர்கள் கௌரவத்தினை சாமித்தம்பி பொன்னுத்துரை , திருமதி பத்மாவதி தங்கராசா , திருமதி புஸ்பலட்சுமி விமலகாந்தன் ஆகியோர் பெறவுள்ளவார்கள்
தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் கந்த சத்தியதாசன் நெறிப்படுத்தலில் நடைபெறும் இளஞ்சைவப்புலவர் சைவப்புலவர் பட்டமளிப்பு நிகழ்வில் இளஞ்சைவப்புலவர் பட்டத்தினை கலாமோகன் பிரகான் (வாழ்வகம் சுன்னாகம்) ,செல்வி கோகிலா சிதம்பரப்பிள்ளை (கோவிற்குளம் வவுனியா) , செல்வி அன்னலட்சுமி இராமர் (கண்டி) , ஆறுமுகம் சசிநாத் (கனகராயன்குளம் வவுனியா) , செல்வி ஷமந்தி சந்திரசேகரம் (கொழும்பு) , திருமதி சுசிலாதேவி கிருஷ்ணராஜன் (வவுனியா) , இந்திரராசா மோகன்  (உடுவில் ) , செல்வி ரேபிகா சண்முகலிங்கம் (முழங்காவில்) , செல்வி சுதேந்தினி கணபதிப்பிள்ளை (வெற்றிலைக்கேணி முள்ளியான்) , திருமதி புவனராணி இரகுநாதன்  (அரியாலை) , செல்வி லோஜிதா மகேந்திரன் (மீசாலை) , பகீரதன் சுகிர்தன் (திருக்கோவில் மட்டக்களப்பு) , சாமித்தம்பி திருநாவுக்கரசு (கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு) , திருமதி மகேஸ்வரி விஜயரத்தினம் (சாவகச்சேரி) , செல்லத்துரை பிருந்தாபரன் (திருநெல்வேலி யாழ்ப்பாணம்) ஆகியோரும் சைவப்புலவர் பட்டத்தினை திருமதி காந்திமதி சூரியகுமார் (லண்டன்) , முருகப்பன் சேமகரன் (அவுஸ்ரேலியா),  திருமதி கமலாதேவி சபாரத்தினம் (அரியாலை) , திருமதி லீலாவதி அருளையா (தெல்லிப்பளை) , கணபதிப்பிளைளை வெற்றிவேல் (கிளிவெட்டி திருகோணமலை) , நாகமணி நித்தியானந்தன் (லண்டன் ) , இராமையா ஜீவன்பிரசான் (மாத்தளை)  , திருமதி சற்சொரூபவதி  சுபமுரளிதரன் (கொழும்பு) , திருமதி பத்மாவதி தியாகராசா (லண்டன்) , நாராயணமூர்த்தி சுஜீவன் (தவசிக்குளம் வவுனியா)  , சிவஸ்ரீ கறுவல்தம்பி குமராசாமி (மண்டூர்) , செல்வி மந்தாகினி பாலச்சந்திரன் ( மல்லாகம்) ஆகியோரும் பட்டத்தினைப் பெறவுள்ளார்கள்.
சைவநாதம் 8 மலர் வெளியீட்டில் வெளியீட்டுரையினை சைவப்புலவர் சி.கா.கமலநாதன் நயப்புரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்த முதுகலைமாணி இணைப்பாளர்  சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி விக்கினேஸ்வரி பவநேசன் ஆகியோர் வழங்கவுள்ளார்கள்.
முதற்பிரதியினை செ.சற்குணம் அவர்களும் சிறப்பு பிரதியினை அலங்கார வித்தகன் க.வரததாசன் அவர்களும் பெறவுள்ளார்கள் நன்றியுரையினை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் த.குமரன் வழங்கவுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More