Home இலங்கையாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை

யாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.வரணி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நகை மற்றும் 35 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். வரணி இயற்றாலை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை முகங்களை மூடி கட்டியவாறு உட்புகுந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த தம்பதியினரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் போது 06 பவுண் நகை, 35 ஆயிரம் ரொக்கப்பணம் , விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி, காணி உறுதிகள் , ஆடைகள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More