ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாளை (16.12.18) பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்ததனை அடுத்து, புதிய அமைச்சரவை, நாளை மறுதினம் (17.12.18) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் 19ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவும் இருக்குமெனவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.
இதற்கமைய, ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியைச் சேர்ந்த அறுவர் உள்ளடங்களாக 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யுமெனத் தெரியவருகின்றது. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.