Home இலங்கைபாதாள உலகக் குழுவினருக்கு துப்பாக்கிகளை வழங்கிய இராணுவ கட்டளை அதிகாரிக்கு விளக்கமறியல்

பாதாள உலகக் குழுவினருக்கு துப்பாக்கிகளை வழங்கிய இராணுவ கட்டளை அதிகாரிக்கு விளக்கமறியல்

by admin


பாதாள உலகக் குழுவினருக்கு துப்பாக்கிகளை வழங்கிய இராணுவ கட்டளை அதிகாரி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள உலகைச் சேர்ந்த மூவருக்கு இராணுவ முகாமிலிருந்த துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் பெருந்தொகையிலான சன்னங்களை வழங்கிமைக்காக ராணுவ மேஜரான கட்டளை அதிகாரி சியாம்பலாண்டு என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

முன்னர் கைது செய்யப்பட்டிருந்த பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே மேற்படி ராணுவ கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More