152
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள சால்வாடி கிராமத்திலுள்ள கிச்சுகட்டி மாரம்மா கோயிலில் நேற்று கோபுரம் கட்டுவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையின் போது கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love