ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயற்படவுள்ளதாகவும் அந்தவகையில் மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சி தலைவர் பதவியை பெறுவார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஸவிற்கு 101 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுள்ளதனால் சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் பதவியை மகிந்த ராஜபக்ஸவிற்கே வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் மகிந்த ராஜபக்ஸவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.