இன பிரச்சினை மற்றும் ஆயுதப் போராட்டத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை தாம் வழங்கியே தீருவோம் எனவும் அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரத்துக்கெதிரான தமது ஜனநாயக போராட்டமானது நீதித்துறையினூடாக வெற்றி பெற்றுள்ளது எனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்; ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் புதிய அரசிலமைப்பைக் கொண்டு வந்தே தீரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றியதும் எதிர்த்தரப்பு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டது போன்று தாங்கள் பழிவாங்கல் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் அனைவரும் அரசிலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதே தீர்ப்புக்கள் மூலம் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் தெரித்துள்ளார்.