145
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.16 மணியளவில அவர் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெறவுள்ள நிலையில் அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love