181
பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டுக்காக ஆரம்பித்துள்ள போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் தங்காலையில் உள்ள அவரது கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பதவியிலிருந்து விலகுவது தனக்கு கடினமான ஒரு விடயமல்ல எனத் தெரிவித்த அவர் தான் பிரதமராக பதவி வகித்த குறுகிய காலத்துக்குள் பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
Spread the love