Home இலங்கைபாராளுமன்ற குழப்பநிலை தொடர்பான விசாரணை, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம்….

பாராளுமன்ற குழப்பநிலை தொடர்பான விசாரணை, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம்….

by admin

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியமை, மிளகாய்த் தூள் வீசப்பட்டமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்றன தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தற்போது பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரியவின் கையொப்பத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More