ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட இந்த திடீர் வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது
இந்தத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுள்ள நிலையில் இரண்டுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது