யாழ் குடாநாட்டின் சில பகுதிகள் கடல் கொந்தளிப்பு காரணமாக நீரில் மூழ்கி வருகின்றன. குறிப்பாக இன்று (17) தொண்டமானாறு கடல்நீரேரி பெருக்கெடுத்ததினால் அச்சுவேலி வல்லை கிராமம் நீருக்குள் மூழ்கி வருகிறது.
அடுத்து பருத்தித்துறை பகுதியில் உள்ள முனைப்பகுதி கடலரிப்புக்கு உள்ளாகி வருவதுடன் அங்கு கடல் நீர் உட்புகுந்ததால் மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இது தவிர கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீா் உயா்ந்து தாழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.
இதனால் பல நுாற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தினால் தமது குடியிருப்புக்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கியிருக்கின்றனா்.
மேலும் வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவான தாழமுக்க மண்டலமாக மாறி தற்பொழுது பாரிய சூறாவளியாக உருவெடுத்துள்ள நிலையில் வட கடலின் கொந்தளிப்பு தற்பொழுது அதிகமாக காணப்படுகின்றது.இதனால் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்