பிரித்தானியாவில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் வகையில் பெயர் சூட்டியதன் காரணமாக கைது செய்யளப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இவர்கள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ப் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
பிரித்தானியாவின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது அடம் தோமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படடஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான வரலாறு காணப்படுவதாக தெரிவித்த நீதிபதி தோமசுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் க்ளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளார்.