மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுத்நதிர முன்னணியின் சின்னத்தின் கீழேயே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு இருக்கையில் எவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்க முடியும் என்றும் இது பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன் சபாநாயகரால் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை என்றும் இந்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே, புதிய அரசியலமைப்பை நாடுவதாகவும் அதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளும் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளும் தீர்வு காணப்படும் என்றும் அத்துடன், அரசியலமைப்பில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் இதன்போது மேலும் தெரிவித்தார்.