ஐக்கிய தேசிய முன்னணியினால், 35 பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல், ஜனாதிபதியிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சமரச பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது
இருந்த போதிலும் பெயர் பட்டியலிலிருந்து அறுவரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கியுள்ளார். அதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த ரங்கே பண்டார ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கவிட்டார். அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணிக்கு தாவிய, விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் பெயர்களையும் நீக்கியுள்ளார்.
மைத்திரியின் வேண்டத்தகாதோர் பட்டியலில் சிக்கித் தவிப்போர்…
167
Spread the love