ஹங்கேரியில் மேலதிக வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோர் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தேவையற்ற சட்டங்களை தாம் மாற்றுவதாகவும் அதிக ஊதியம் பெறவிரும்புபவர்கள் அதிக மணித்தியாலங்கள் வேலை செய்யலாம் எனவும் அந்நாட்டு பிரதமர் விக்டர் ஒர்பன் (Victor Orban) தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய சட்டத்தின் கீழ், 1 வருடத்துக்கான 250 மணித்தியாலங்கள் மேலதிக வேலைநேரத்தை 400 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக வேலைநேரத்துக்கான கொடுப்பனவுகளை 3 வருடங்கள் வரை தாமதித்து வழங்க முடியும் எனவும் குறித்த புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள வர்த்தக சங்கங்கள் பாரிய பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.