ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் கோரி மத்திய மற்றும் தமிழக அரசுகளிடம் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் உள்ள கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏலத்தை மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் ஏலம் விட்டிருந்தது.
இதற்காக, சற்றலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் கிடைத்த சதுரபரப்பளவில் ஹைட்ரோகார்பன் அமைந்த இடங்கள் கண்டறியப்பட்ட நிலையில் தமிழகத்தின் இரண்டு இடங்களை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் பெற்றுள்ளது.
இங்கு தன் பணியை ஆரம்பிக்க வேதாந்தா, மத்திய அரசிடம் 25 மற்றும் தமிழக அரசிடம் 15 வகையான உரிமங்களை பெற வேண்டி உள்ள நிலையில் மத்திய மற்றும் தமிழக அரசுகளிடம் வேதாந்தா நிறுவனம் கடந்த மாதம் மனு செய்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள உரிமங்கள் ; கிடைக்கவில்லை எனில் அதற்காக நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்புகள் உள்ளன எனவும் ஏலத்தில் தங்களுக்கு கிடைத்த இடங்கள் அனைத்தும் சட்டப்படியானவை எனவும் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது
வேதாந்தா நிறுவனம் நடத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டதரைனயடுத்து மூடப்பட்டது.
இதை எதிர்த்து அந்நிறுவனம் தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தவகையில், ஹைட்ரோகார்பனுக்கும் எதிர்ப்பு கிளம்புவதால் அதை எடுக்க தமிழக அரசு உரிமம் வழங்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.