தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு நீண்டாக காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றது. எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனதிராசா தெரிவித்தார்,
போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு சுவிஸ் வாசல் செந்தமிழ்ச்சோலையின் நிறுவன அனுசரணையுடன் இலங்கைத் தமிழசுக் கட்சியின் அலுவலத்தில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசியல் தொடர்பில் பலரும் பலகருத்துக்களை முன்வைக்கலாம். அது ஜனநாய ரீதியானதே. நாங்களும் ஜனநாயக ரீதியில்தான் செய்பட்டுவருகின்றோம். கடந்த மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் யாவரும் அறிந்தததே. இது திருட்டுத் தனமான முறையற்ற விதத்தில் பிரதமரை இல்லாது ஆக்கியது அமைச்சரவையை இல்லாதாக்கிய செயற்பாடுகள். அரசியலமைப்புக்கு முரணாவே இடம்பெற்றுள்ளன.
அவை அனைவராலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதற்காகவே நீதிமன்றம் சென்றமையிலனால் உயர் நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டியது. உயர் நீதிமன்றத் தீர்ப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கு அமைவாக தற்போது புதிய அரசியல் தீர்வு இடம்பெற்றது. நாங்கள் எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். சிலர் எமது செயற்பாட்டை பார்த்து ஒரு கட்சிக்கு சார்ந்தாக நடப்பதாகக் கூச்சல் இடுகின்றார்கள். ஆனால் நாங்கள் ஜனநாயக ரீதியாக செயற்பட்டு ஜனாநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம்.
இதேபோல்தான் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள அரசியல் தீர்வை கண்டடைவோம். சம நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பகுதிகளை சீரமைப்பதும் பெண் தலைமைத்துவம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பாகவும் மீண்டும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
இத்தகைய செயற்பாடுகளுக்கு உறுதுணையாக சர்வேதச சமூகமும் எங்களுடன் நிற்கின்றது. இந்தத்தருனத்தை நாங்கள் முறையாக பயன்படுத்தி எமது மக்களுக்காக தொடர்தும் செயற்பட்டு வருவோம் என மேலும் தெரிவித்தார்.
1 comment
“இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகிறோம். போராட்டம் ஓயாது. மீண்டும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம். நாங்கள் எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்” என்று சேனாதி கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 2015 தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் இன்று வரை எடுத்த அதிகாரங்கள் என்ன?
விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட நிலம், சட்டம், ஒழுங்கு, சட்ட அமுலாக்கம், தமிழர்களின் பாதுகாப்பான நிலை மற்றும் அபாயமற்ற நிலை என்பவற்றை உறுதி செய்ய, சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான சுகாதாரம், கல்வி, உயர் கல்வி, தொழிற் பயிற்சி, விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, கலாச்சார விவகாரம், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வளங்களை திரட்டுதல் மற்றும் பொது நிதி அதிகாரம் தொடர்பாக உருவாக்கிய திட்டங்கள் என்ன? பூர்த்தி செய்யப்பட்ட பணிகள் என்ன?
மேற்கூறிய 3 கேள்விகளுக்கும் சேனாதி பதிலளிப்பாரா?