குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார்.
நேற்று (21) வெள்ளிக்கிழமை இரவு வரை பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் உள்ள மீள் குடியேற்ற கிராமமான ‘பெல்வேறி’ கிhரமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களே பாதீக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னாரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த கிராம மக்களை அக்கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் உடனடியாக சென்று பார்வையிட்டதோடு,மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
-மேலும் கிராம அலுவலகர் ஊடாக அந்த மக்களுக்கு உணவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இராணுவத்தினரும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதீக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்காலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களுடைய 12 படகுகளும் சேதமாகியுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.