184
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் இடைக்கால நிர்வாக குழுவின் தலைமைப்பதவியை ஏற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் வீரர் ரொசான் மகாநாம தெரிவித்துள்ளார். இடைக்கால குழுவின் தலைவராக ரொசான் மகாநாம நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தீர்மானிப்பதற்கு தனக்கு இன்னமும் காலஅவகாசம் தேவை என குறிப்பிட்டுள்ள அவர் தலைவர் பதவியை ஏற்பது குறித்து பல கோணங்களில் ஆராயவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐசிசியினால் ஏற்படக்கூடிய தடைகளை கடக்கவேண்டும் எனவும் மகாநாம தெரிவித்துள்ளார்
Spread the love