146
செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு யூன் 2-ம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது கறிப்பிடத்தக்கது
Spread the love