இந்தோனேசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் எரிமலை வெடிப்புக்கு பின்னர் ஏற்பட்ட சுனாமி பேரலைகளின் காரணமாக குறைந்தது 222 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 843 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாக அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்துள்ளது.
இந்தநிலையில் மீண்டும் சுனாமி ஏற்படும் என்ற அச்சம் காரணமாக மக்களை கடற்கரைக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பேரிடர் மேலாண்மை முகமையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.