Home இலங்கைபொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையா? அது நான் அல்ல!!

பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையா? அது நான் அல்ல!!

by admin


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தாம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்கு பறம்பானது என்று மஹிந்த ராஜபகக்ஸ தெரிவித்துள்ளார்.சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு எதிர்கட்சி பதவி விவகாரம் தொடர்பில் கூறுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  அத்துடன் தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என்றும் கட்சியின் மூத்த ஆலோசகராக செயற்படுவதாகவும் மூத்த ஆலோசகர்கள் கட்சி மாறமாட்டார்கள், அவர்களுக்கு ஓய்வு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை அட்டையை ஏற்றுக்கொண்டதாக வெளியாகிய படம் தொடர்பில் அவ் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.  இதற்கு பதிலளித்தமஹிந்த ராஜபக்ஸ, உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டதன் படம் அதுவல்ல என்றும் தாம் பொதுஜன முண்ணனியில் இணைந்துகொள்ளும் போது அப் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த அட்டையில் தனது பெயர் அச்சிடப்படவில்லை என்றும் அப் புகைப்படத்தில் தான் வைத்திருக்கும் ஆவணம் உறுப்பினர் அட்டை அல்ல என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தல் மற்றும் உறுப்புரிமை வழங்குதல் என்பன இருவேறு விடயங்கள் என்றும் மகிந்த கூறுகிறார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More