215
திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த ரங்கம்மாள் பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் கைகுட்டை விற்று தனது காலத்தை கடத்தி வருகின்ற நிகழ்வு அவரது ரசிகர்களை பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.
திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த ரங்கம்மாள் பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் கைகுட்டை விற்று தனது காலத்தை கடத்தி வருகின்ற நிகழ்வு அவரது ரசிகர்களை பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.
தமிழ் சினிமா திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த கே.ஆர்.ரங்கம்மாள் (வயது 75) சென்னை வடபழனி குமரன் கொலனியில் வசித்து வருகிறார்.
மூதாட்டியான இவரது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள நகைச்சுவைகள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது. இவர் ‘சூ பாட்டி’ என்றும் அழைக்கப்படுகின்றார்.
இந்நிலையில், இன்று பட வாய்ப்புகள் இன்றி வறுமையில் வாடுகின்றார். ஒன்பது பிள்ளைகள் பெற்றும் அனைவராலும் கைவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மெரினா கடற்கரையில் கைகுட்டை விற்று காலத்தை கடத்துகின்றார்.
மெரீனா கடற்கரைக்கு வரும் அவருடைய ரசிகர்கள் ரங்கம்மாள் பாட்டியுடன் ‘செல்பி’ எடுத்துச் செல்கின்றனர். உற்சாகமாக புகைப்படங்கள் எடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கின்றார்.
தமிழக அரசும் நடிகர் சங்கமும் உதவ வேண்டும்!
தனது இன்றைய நிலை குறித்து அவர் கூறுகையில்,
நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்’ ஆகவும் நடித்திருக்கிறேன். தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். 500 படங்களுக்கு மேல் நடித்து நான் சம்பாதித்த பணத்தை எனது பிள்ளைகளுக்கே செலவழித்துவிட்டேன். தள்ளாத வயதில் நான் நடிக்க தயாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படுகிறேன். அதனாலேயே மெரினா கடற்கரைக்கு வந்து கைக்குட்டை மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு சொற்ப வருமானமே கிடைக்கிறது. அது எனக்கு போதுமானதாக இல்லை. எனவே எனக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்கும்.
என்று தெரிவித்துள்ளார்.
Spread the love