நீண்ட காலமாகத் தீர்வுக்கு வராமல் இருக்கும் ராமர் கோயில் – பாபர் மசூதி சர்ச்சைக்குரிய வழக்கை 2019ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி விசாரிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது
ராமர் கோயில் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய 2.2 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளுக்கு சமமாக பிரித்தளிக்க வேண்டும் என 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றுமாறு போராட்டங்கள், பேரணிகள் வாயிலாக மத்திய அரசுக்கு இந்துத்துவ அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்தநிலையில் குறித்த வழக்கினை ஜனவரி 4ஆம் திகதி விசாரிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது