179
மும்பையில் உள்ள துணி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . நேற்று பிற்பகல் தீப்பிடித்த போது உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்ற போதும் கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் உள்ள 2 துணி ஆலைகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தகவல் அறிந்து 4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love