Home உலகம் இத்தாலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு

இத்தாலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு

by admin

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது.

சிசிலித் தீவில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்தே எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது.  இதனையடுத்து அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதனால் சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும் இத்தாலியின் பூகோளவியல் மற்றும் எரிமலைகள் பற்றிய தேசிய ஆய்வு நிறுவனம தெரிவித்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More