187
கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் விசப்பாம்பு தீண்டியதனால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(27) மாலை இடம்பெற்றுள்ளது. வழமை போன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மாணவனை விசப்பாம்பு தீண்டியுள்ளதனையடுத்து மயக்கமடைந்த மாணவனை தீவிர சிகிச்சைக்கு எடுத்து சென்ற போதிலும் பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் வசித்த 8 வயதான சுலோஸ்குமார் ஹரீஸ்னு என்பவராவார்
பாறுக் ஷிஹான்
Spread the love