அச்சுவேலி நகரப்பகுதியில் உள்ள பாடசாலை உபகரணங்கள் விற்பணை செய்யும் நிலையத்தில் நள்ளிரவு இடம்பெற் தீ விபத்தினால் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் கடையில் இருந்த பாடசாலை உபகரணங்கள் மற்றும் மென்பானங்கள், ஜஸ்கிறீம் வகைகள் உட்பட பல இலட்சத்துக்கு அதிகமான பொருட்கள் தீயில் முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்தப் புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இரவு 11:30 மணியளவில் பாரிய வெடிச்சத்தங்களுடன் தீ பரவ ஆரம்பித்து, 12:30 மணிவரை நீடித்துள்ளது. கடையில் இருந்த பட்டாசு வெடிபொருட்கள் பாரிய சத்தத்துடன் வெடிப்பதணை அடுத்து வெளியில் வந்து பார்த்த அயலவர்களுக்கு கடை தீ பிடித்து எரிவது தெரியவந்துள்ளது. ஒன்றுகூடிய பொதுமக்கள் தீயினை கட்டுப்படுத்துவதற்கு முயன்ற போது கடையில் இருந்த அணைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
அதே வேளை சம்பவ இடத்திற்கு வந்த அச்சுவேலி காவற்துறையினர், மநாகரசபையின் தீ அணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்படுத்த முனைந்த போதும் தீயினை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. குறித்த சம்பவம் விபத்தா ? அல்லது திட்டமிட்ட சதியா? என காவற்துறையினர் மேலதிக விசாரணை முண்னெடுத்து வருகின்றனர்.