வெள்ளம் சூறாவளி நெருப்பு இவற்றினால் அனர்த்தம் ஏற்படும்போது அனைத்து மதத்தவரும் ஒன்றாக இருக்கின்றனர் அனர்த்தம் முடிந்து சந்தோசமாக வீட்டில் இருக்கும்போது எனது மதம் பெரியது உனது மதம் சிறியது என்று அனைவரும் சண்டை பிடிக்கின்றனர். இந்த எண்ணம் மாற வேண்டும் அதுவே நாட்டிற்கு அபிவிருத்தியை ஏற்படுத்தும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வி அமைச்சின் கலாச்சார திணைக்களம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒளிவிழா மன்னார் மாந்தை மேற்கு நகர விளையாட்டு மைதானத்தில் நேற்று (27.12.18) மாலை நடைபெற்றது.
இங்கு மேலும் உரையாற்றி ஆளுனர் , மதங்கள் முரண்பாடு இல்லாது மனிதர்கள் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றபோதும் தெய்வங்களை குடும்பிடபோற பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிக்கின்றார்கள். மதங்கள் மனித நேயத்திதை மேலே வைக்குமாறு வலியுறுதுத்துகின்றன. நாம் அதனை பின்பற்றவில்லை ஆன்மாவின் விடுதலைக்காக தெய்வத்தை நினைத்து தவம் செய்கின்றவர் மதத்திற்காக வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய இம்மானுவேல் பெர்னான்டோ கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மாந்தை மேற்கு பிரதேச செயலர் செ. கேதீஸ்வரன் கலாச்சார திணைக்களப்பணிப்பாளர் சிவதாஸ் சுஜீவா உட்பட குரு முதல்வர்கள் கலந்து கொண்டிருந்தனர்.