யாழ்.பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீதிகளில் இரவு வேளைகளில் கழிவுகளை வீசிய 22 பேரை பிரதேச செயலக ஊழியர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீதிகளில் இரவு வேளைகளில் குப்பைகள், கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்கள், இறைச்சி கழிவுகளை வீசி வருவதனால் வீதியால் செல்வோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
அது தொடர்பில் முறைபாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் பிரதேச செயலக ஊழியர்கள் இரவு விசேட வீதி சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது சைக்கிளில், மோட்டார்சைக்கிள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் கழிவுகளை எடுத்து வந்து வீதியில் வீசி சென்றவர்களை மடக்கி பிடித்தனர்.
அவ்வாறாக நேற்றையதினம் இரவு 22 பேர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். மடக்கி பிடிக்கப்பட்டவர்களை காவற்துறையினரிடம் ஊழியர்கள் கையளித்தனர். அதனை அடுத்து 22 பேருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.