பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் மோதல்களை தோற்றுவிக்க முயல்வதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்
திகனவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அரசியல் பின்னணி காணப்படுவதாகவும் இது சிங்கள- முஸ்லிம் சமூகங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றார் எனவும் அதற்காக நாட்டை ஒரு நெருக்கடிக்குள் வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், மாவனெல்லையில் அண்மையில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் காணப்படுகிறது என்றும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.