Home இலங்கைஜெனீவாவில் தம்மை பாதுகாக்கவே படையினர் மக்களுக்கு உதவினர்

ஜெனீவாவில் தம்மை பாதுகாக்கவே படையினர் மக்களுக்கு உதவினர்

by admin

ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை பாதுகாப்பதற்கான முயற்சியாகவே வெள்ளப் பெருக்கின் போது படையினர் மக்களுக்கு உதவியுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.சிக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் அரசியல் குழப்பங்களை தீர்க்க இலங்கை நீதித்துறை சிறப்பாக செயற்பட்டதைப் போற்று, படையினர் இழைத்த யுத்த குற்றங்கள் விடயத்திலும் நீதியை வழங்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 100 குடும்பங்களுக்கு முன்னாள் முதலமைச்சரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More