அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக சமநிலையை சீனா முறையாக அணுகவில்லை என்று டிரம்ப் குற்றச்சாட்டு முன்வைத்ததை அடுத்து இருநாடுகளிடையே ஒரு வர்த்தக போர் ஆரம்பமானதினை தொடர்ந்து இருநாடுகளும் ஒன்றின் மீது ஒன்று வரிகளை விதித்துக் கொண்டிருந்தன.
இதனையடுத்து இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விதித்து கொண்ட புதிய வரிகளை விலக்கிக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வதாக இந்த மாத தொடக்கத்தில் முடிவெடுத்திருந்த நிலையில் டிரம்ப் இவ்வாறு தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.