Home உலகம்பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது.

பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது.

by admin

பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதேவேளை பிரதமர் ஷேக் ஹசினா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள தேசிய கட்சித் தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயல்கிறது என குற்றம் சுமத்தியுள்ளதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150-க்கும் அதிகமான இடங்களில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More