147
ஆஷிஸ் போதைப் பொருளுடன் இலங்கைக்குள் வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய, போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று (30) இரவு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த நபரின் பயணப் பையில் இருந்து சுமார் 2 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ 280 கிராம் நிறையுடைய ஆஷிஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love