பிரதான செய்திகள் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்; இந்தியா முதலிடத்தில்

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்ட வென்று டெஸ்ட் தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

108 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 3-வது இடத்தில் நியூசிலாந்தும், 4-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 5-வது இடத்தில் அவுஸ்திரேலியாவும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap