பங்களாதேசில் நேற்றையதினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஹேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். அங்கு இதுவரை யாரும் 4-வதுமுறையாக யாரும் பிரதமராக வந்ததில்லை என்பதால், ஷேக் ஹசினா புதிய வரலாறு படைக்க உள்ளார்.
எனினும் தேர்தல் முறையாக நடக்கவில்லை எனவும் நடுநிலையான அரசின் கீழ் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் 288 தொகுதிகளில் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் 6 இடங்களையே கைப்பற்றியுள்ளன.
இதேவேளை அங்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தபோது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.