கூட்டமைப்பினர் கோரும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தினை ஏற்கவில்லை எனவும், ஒற்றையாட்சியே நீடிக்கும் எனவும் தெரிவித்த அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல புதிய அரசமைப்பு அடுத்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
File Photo
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் இடம்பெற்று வருகின்றன எனக்குறிப்பிட்ட அவர் அவை முடிவடைந்தப் பின்னர் அடுத்த வருடம் பாராhளுமன்றத்தில் சட்டமூலம் சமர்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள அரசமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது எனவும் தெரிவித்த அவர் ஏக்கிய என்ற சொற்பதத்திலும் எவ்வித மாற்றமும் செய்யப்படாது எனவும் தமிழில் ஒருமித்த நாடு என்ற பதத்தை இணைக்குமாறு தமிழ்க் கட்சிகள் கோரிக்கை முன்வைத்தன எனினும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்