குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ இன்றையதினம் இலங்கைக்கு வரவுள்ளார்.
பதினைந்து ஆண்டுகளின் பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு பயணம்செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை பயணம் செய்ய உள்ளார்
Dec 28, 2017 @ 02:47
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி அவர் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். பதினைந்து ஆண்டுகளின் பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு பயணம்செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.