167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் சுமார் 25000 வெளிநாட்டு தொழில்வான்மையாளர்கள் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தே அதிகளவானவர்கள் இவ்வாறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது.
வதிவிட வீசாக்களின் அடிப்படையில் அதிகளவானவர்கள் இவ்வாறு கடமையாற்றி வருவதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் பல்வேறு தொழில்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் கடமையாற்றி வருவதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
Spread the love