Home இலங்கைவேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் சில வேட்பாளர்கள் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடுவதாகவும் அதற்கு அரசாங்க அதிகாரிகள் உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான முறைப்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வேட்பாளரையும் மேம்படுத்தாத வகையில் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More