வவுனியாவிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து தரிப்பிட வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை மூடி, பஸ்கள் உள்ளே செல்ல முடியாத படி, பரல்கள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வௌியிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து தரிப்பு நிலையம் மூடப்பட்டமையால், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதற்கமைய, 147 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, வவுனியா வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாளை இந்த விடயம் தொடர்பில் வவுனியா முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிப்பது குறித்து இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அச் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்குமாறு வடமாகாணசபை முதலர்வர் சி.வி விக்னேஸ்வரன் உத்தரவிட்டு இருந்த நிலையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.