குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நடைமுறைச் சாத்தியமுடைய திட்டங்களை முன்வைக்குமாறு அரசியல் கட்சிகளிடம் இத்தாலி ஜனாதிபதி சேர்ஜியோ மற்றரளா (Sergio Mattarella ) கோரிக்கை விடுத்துள்ளார். வேலையில்லாப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியப்பாடுடைய தீர்வுத் திட்டங்களை இத்தாலி முன்வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இத்தாலியில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இத்தாலில் ஜனாதிபதி பதவி என்பது வெறும் பெயரளவிலானது என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் அமைச்சர்களை நியமிக்கவும், பாராளுமன்றை கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி இத்தாலியில் தேர்தல் நடைபெறவுள்ளது.