இலங்கை பிரதான செய்திகள்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து ஜனாதிபதி விசேட உரை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்ற உள்ளார். மத்திய வங்கி வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் கே.ரீ.சித்ரசிறி இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இடம்பெற்ற பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி ஜனாதிபதியினால் இந்த விசேட ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.