குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான அறிக்கையொன்று இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் அரச சொத்து துஸ்பிரயோகங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கிலான பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பக்கங்களைக் கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரித்தீ பத்மன் சூரசேன இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளார்.