உலகம்

சமூக ஊடகங்களில் குரோத உணர்வுப் பிரச்சாரங்களை தடுக்க ஜெர்மன் நடவடிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சமூக ஊடகங்களில் குரோத உணர்வைத் தூண்டக்கூடிய பிரச்சாரங்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஜெர்மன் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.  பொய்யான செய்திகள், சட்டவிரோதமான விடயங்கள் மற்றும் குரோத உணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் என்பனவற்றை தடுக்கும் வகையிலான சட்டங்கள் ஜெர்மனியில் அமுல்படுதுத்தப்பட உள்ளது.

பிரசூரமாகும் சட்டவிரோதமான விடயங்களை உரிய நேரத்தில் கண்காணித்து அகற்றாத இணைய தளங்கள் மீது 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான விடயங்கள் பிரசூரமாகி அதனை அகற்றுவதற்கு 24 மணித்தியால கால அவகாசமே வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடக வலையமைப்புக்கள், செய்தி இணைய தளங்கள் என்பன மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply