குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களை ஒடுக்குவதாக கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தமது கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களையே அந்தக் கட்சிகள் ஒடுக்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. பெண் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் உதாசீனம் செய்து வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஆண் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் அதே விதமான சலுகைகள் பெண் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பெண் வேட்பாளர்கள் உதாசீனம் செய்யப்படுவதனால் அந்தந்த கட்சிகளே பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விருப்பு வாக்கு அடிப்படையிலான தேர்தல் முறையிலிருந்து சில ஆண் வேட்பாளர்கள் இன்னமும் வெளிவரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.