485
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் சில பகுதிகளில் நிலவி வரும் வரட்சி காரணமாக சுமார் 3லட்சம் பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. புத்தளம், குருணாகல், வவுனியா, அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இவ்வாறு வரட்சி நிலவி வருகின்றது.
கடந்த ஆண்டில் இலங்கையில் கடுமையான வரட்சியும் கடுமையான மழை வெள்ளமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரட்சி காரணமாக விளைச்சலில் பாரியளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love